ஜெகன்மோகன் ரெட்டிக்கு கொரோனா பரிசோதனை
ரேபிட் டெஸ்ட் கருவி மூலம் ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
ஆந்திர மாநிலத்தில் பொதுமக்களுக்கு கொரோனா தொற்று இருக்கிறதா என்பதை சோதனை செய்வதற்காக தென்கொரியாவில் இருந்து ஆந்திர மாநில அரசு சார்பில் சுமார் ஒரு லட்சம் ரேபிட் டெஸ்ட் உபகரணங்கள் வாங்கப்பட்டன.
இதனைத்தொடர்ந்து ஜெகன்மோகன் ரெட்டி, ரேபிட் டெஸ்ட் கருவி மூலம் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். அதில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது தெரிய வந்ததாக அம்மாநில முதலமைச்சர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
Comments