"சீனாவை போன்று மற்ற நாடுகளும் உயிரிழப்புகளை திருத்தக் கூடும்"

0 6823
உயிரிழப்புகளை கணக்கிடுவது சவாலாக உள்ளது- உலக சுகாதார அமைப்பு

சீனாவை போன்று மற்ற நாடுகளும் கொரோனா உயிரிழப்புகளின் எண்ணிக்கையை திருத்திக் கூற வாய்ப்புள்ளதாக, உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

சீனாவின் ஊகான் நகரில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,869 ஆக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மேலும் 1,290 உயிரிழப்புகளை அந்நாட்டு அரசு இணைத்துள்ளது. இந்நிலையில், ஜெனிவாவில் விர்ட்சுவல்(virtual) முறையில் செய்தியாளர்களைச் சந்தித்த உலக சுகாதார அமைப்பின் தொழில்நுட்ப தலைவர், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையையும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளையும் கணக்கிடுவது பெரும் சவாலாக உள்ளதாக தெரிவித்தார்.

மேலும், ஊகான் பகுதி மருத்துவர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் கவனம் செலுத்தியதால், சரியான நேரத்தில் அவர்கள் ஆவணங்களை தயார் செய்யவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments