ஆப்பிரிக்க நாடுகளில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு அதிகரிப்பு
ஆப்பிரிக்க நாடுகளில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், கொரோனாவின் அடுத்த மையமாக இருக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
ஆப்பிரிக்கா முழுவதும் இதுவரை 18 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், ஆயிரம் பேர் மரணம் அடைந்துள்ளனர்.
இது பற்றி பேசிய, உலக சுகாதார அமைப்பின் ஆப்பிரிக்காவுக்கான இயக்குநர் மட்ஷிடிசோ மொய்டி தென் ஆப்பிரிக்கா, நைஜீரியா, ஐவெரி கோஸ்ட், கேமரூன், கானா ஆகியவற்றின் முக்கிய நகரங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்திருப்பதாகத் தெரிவித்தார்.
அங்கு மருத்துவ வசதிகளோ, தேவையான உபகரணங்களோ இல்லை என்றும் அவர் கூறினார். மேலும் போதிய வென்டிலேட்டர் வசதி இல்லாதது, தனிநபர் இடைவெளியை கடைபிடிக்காதது சவாலாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Comments