கொரோனா பரிசோதனையை விரைவுபடுத்தக் கோரி வழக்கு

0 1525
கொரோனா பரிசோதனையை விரைவுபடுத்தக் கோரி வழக்கு

கொரோனா பரிசோதனையை விரைவுபடுத்தக் கோரும் வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவை நீட்டித்துள்ள மத்திய, மாநில அரசுகள், பரிசோதனையை விரிவுபடுத்தவோ, விரைவுபடுத்தவோ நடவடிக்கை எடுக்கவில்லை என்று மனுதாரர் தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 14 வரை, 48 ஆயீரத்து 440 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் 12,746 பேரிடம் மட்டுமே பரிசோதனை நடைபெற்றிருப்பதாகவும், தனிமைப்படுத்தப்பட்டவர்களிடம் தொடர்பில் இருந்தவர்களிடமோ, குடும்பத்தினரிடமோ பரிசோதனை செய்யவில்லை என்றும் கூறியுள்ளார்.

மனுவை விசாரித்த நீதிபதிகள் மத்திய - மாநில அரசுகள் 1 வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments