கபசுர குடிநீர் என்று கூறி கள்ளச்சாராயம் விற்ற மூதாட்டி
திருச்சி அருகே கபசுர குடிநீர் என்று கூறி கள்ளச்சாராயம் விற்ற மூதாட்டியை போலீசார் கைது செய்தனர்.
ஊரடங்கு உத்தரவால் கள்ளச்சாராய புழக்கம் அதிகரித்துள்ள நிலையில், போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். ராம்ஜி நகரில் ரோந்துப் பணியில் இருந்த போலீசார், அங்கு கபசுர குடிநீர் விற்றுக் கொண்டிருந்த 65 வயதான விஜயா என்ற மூதாட்டியிடம் தங்களுக்கு கபசுர குடிநீர் தருமாறு கேட்டுள்ளனர்.
போலீசாரைப் பார்த்ததும் கபசுர குடிநீர் தீர்ந்துவிட்டதாகக் கூறி நைசாக நழுவ முயன்ற மூதாட்டியை சந்தேகம் கொண்டு மடக்கி சோதனையிட்டபோது அது கள்ளச்சாராயம் என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், வீட்டில் கள்ளச்சாராயம் காய்ச்ச வைத்திருந்த மூலப் பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.
Comments