கொரோனா அச்சம் : ரமலான் மாத தராவீஹ் தொழுகைகளை வீடுகளில் நடத்திக் கொள்ள உலமாக்கள் வேண்டுகோள்

0 1984
கொரோனா அச்சம் : ரமலான் மாத தராவீஹ் தொழுகைகளை வீடுகளில் நடத்திக் கொள்ள உலமாக்கள் வேண்டுகோள்

இன்னும் ஒரு வாரத்தில் புனித ரமலான் மாதம் துவங்க உள்ள நிலையில், முஸ்லீம்கள், தராவீஹ் எனப்படும் இரவு நேர சிறப்புத் தொழுகையை, பள்ளிகளுக்கு வராமல் வீடுகளிலேயே தொழுது கொள்ளுமாறு உலமாக்கள்  எனப்படும் இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

கொரோனா தடுப்புக்காக ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுவதால், சமூக இடைவெளியை உறுதிப்படுத்தும் வகையில் ரமலான் தொடர்பான அனைத்து வணக்க வழிபாடுகளிலும் நடந்து கொள்ளுமாறு அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

வழக்கமாக நடக்கும் இஃப்தார் எனப்படும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிகளை நடத்த வேண்டாம் என்றும் அதற்கு செலவழிக்கும் பணத்தை வருமானமின்றி தவிக்கும் ஏழை மக்களுக்கு வழங்குமாறும் உலமாக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொரோனாவின் பிடியில் இருந்து உலகமக்களை காக்குமாறு ரமலான் மாதத்தில், எல்லாம் வல்ல இறைவனிடம் இறைஞ்சுமாறும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments