நொச்சிமலை ஏரியில் செத்து மிதக்கும் பல்லாயிரக்கணக்கான மீன்கள்
திருவண்ணாமலை நொச்சிமலை ஏரியில் பல்லாயிரக் கணக்கான மீன்கள் செத்து மிதக்கின்றன.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக திருவண்ணாமலை முழுதும் தெருக்கள் வீடுகளில் நகராட்சிப் பணியாளர்கள் 3 நாட்களுக்கு ஒரு முறை கிருமிநாசினி, பிளீச்சிங் பவுடர் உள்ளிட்டவற்றை தெளித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த வாரம் பெய்த திடீர் மழையால் கிருமிநாசினி பிளீச்சிங் பவுடர் உள்ளிட்ட அனைத்தையும் அடித்துச் சென்று மழைநீர் நொச்சிமலை ஏரியில் கலந்தது. இந்நிலையில் நொச்சிமலை ஏரியில் பல்லாயிரக் கணக்கான மீன்கள் இறந்து கரையொதுங்கி வருகின்றன.
இதற்கு கிருமி நாசினி உள்ளிட்டவற்றில் உள்ள ரசாயனங்களே காரணம் என்று கூறப்படுகிறது. சுற்றுவட்டாரங்களில் துர்நாற்றம் வீசும் நிலையில் பிரச்சினைக்கு மாவட்ட நிர்வாகம் உடனடித் தீர்வு காண மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Comments