ரிசர்வ் வங்கியின் நடவடிக்கை பணப்புழக்கத்தை அதிகரிப்பதுடன், கடன் வழங்கலையும் மேம்படுத்தும் -பிரதமர் மோடி
ரிசர்வ் வங்கி எடுத்துள்ள நடவடிக்கை பணப்புழக்கத்தையும் கடன் வழங்கலையும் அதிகரிக்கும் எனப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
வேளாண் துறைக்கும், தொழில்துறைக்கும் கடன் கிடைப்பதற்காக வங்கியல்லா நிதி நிறுவனங்களின் மறு நிதியளிப்புக்கு வகை செய்யும் ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டத்தை ரிசர்வ் வங்கி அறிவித்தது.
இது குறித்துப் பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்துத் தெரிவித்துள்ளார். அதில், ரிசர்வ் வங்கியின் நடவடிக்கை பணப்புழக்கத்தை அதிகரிப்பதுடன், கடன் வழங்கலையும் மேம்படுத்தும் எனத் தெரிவித்துள்ளார்.
சிறு வணிக நிறுவனங்கள், சிறுகுறு நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், உழவர்கள், ஏழைகளுக்கு இது மிகவும் உதவியாக இருக்கும் என்றும் மோடி குறிப்பிட்டுள்ளார்.
Today’s announcements by @RBI will greatly enhance liquidity and improve credit supply. These steps would help our small businesses, MSMEs, farmers and the poor. It will also help all states by increasing WMA limits.
— Narendra Modi (@narendramodi) April 17, 2020
Comments