கர்நாடக முன்னாள் முதலமைச்சர் மகன் திருமண நிகழ்ச்சியில் ஊரடங்கு விதிமீறல் என சர்ச்சை

0 2082
கர்நாடக முன்னாள் முதலமைச்சர் மகன் திருமண நிகழ்ச்சியில் ஊரடங்கு விதிமீறல் என சர்ச்சை

கர்நாடக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமியின் மகன் திருமண நிகழ்ச்சியில், தனி நபர் இடை வெளி கடைபிடித்தல் , முக கவசம் அணிவது உள்ளிட்ட ஊரடங்கில் பின்பற்ற வேண்டிய அனைத்து விதிகளும் மீறப்பட்டு உள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.

குமாரசாமியின் மகன் நிகிலுக்கும், கர்நாடக காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் கிருஷ்ணப்பாவின் உறவு பெண் ரேவதிக்கும் பிடதி அருகே கேதகனஹள்ளி என்ற இடத்தில் திருமணம் நடைபெற்றது.

முன்னாள் பிரதமர் தேவகவுடா மற்றும் அவரது குடும்பத்தினர், நெருங்கிய உறவினர்கள் , திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.  மணமக்களுடன், தேவகவுடா, குமாரசாமி உள்ளிட்ட அனைவருமே தனி நபர் இடைவெளியை கடை பிடிக்கவில்லை.

அதேபோல, திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள்,  முக  கவசமும் அணியவில்லை. முன்னதாக, நிகில் - ரேவதி திருமணத்தை, Janapadaloke என்ற இடத்தில் மிகவும் ஆடம்பரமாக நடத்த திட்ட மிட்டு,  ஊரடங்கு காரணமாக,குமாரசாமியின் பண்ணை இல்லத்திற்கு மாற்றப்பட்டிருந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments