144 தடை காலத்தில் சென்னையில் குற்றங்கள் 79 சதவீதம் குறைந்தன - காவல்துறை

0 1543

சென்னையில் 144 தடை காலத்தில் அனைத்து வகையான குற்றங்களும் 79 சதவீதம் குறைந்துள்ளதாக காவல்துறை புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

மார்ச் மாதம் 25ம் தேதி முதல் இம்மாதம் 15ம் தேதி வரை 5 கொலை வழக்குகளும், ஒரு வழிப்பறி வழக்கு, 4 கொள்ளை வழக்கு, 12 வீடுபுகுந்து திருட்டு வழக்கு, 49 திருட்டு வழக்கு, 17 காய வழக்கு, போக்குவரத்து பிரிவில் 13 இறப்பு வழக்கு மற்றும் 56 காய வழக்குகள்  பதிவாகியுள்ளன.

இந்த புள்ளி விவரங்களை பிப்ரவரி 25 முதல் மார்ச் 25 வரையிலான நாள்களில் பதிவான வழக்குகளின் புள்ளி விவரங்களுடன் ஒப்பிடுகையில், கொலை வழக்கு 44 சதவீதமும்,  கொள்ளை வழக்கு 75 சதவீதமும், வீடுபுகுந்து திருட்டு வழக்கு 59 சதவீதமும் குறைந்துள்ளன. இதேபோல் திருட்டு வழக்கு 81 சதவீதம்,  காய வழக்கு 82 சதவீதம்,  சாலை போக்குவரத்து இறப்பு வழக்கு 75 சதவீதம்,  சாலை போக்குவரத்து காய வழக்கு  81 சதவீதம் குறைந்துள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments