கொரோனா தடுப்பு நடவடிக்கையால் ஆள் அரவமின்றி காணப்படும் மாஸ்கோ நகர வீதிகள்
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ளதால் ரஷ்ய தலைநகரான மாஸ்கோவின் சாலைகள் ஆள் அரவமின்றி காணப்பட்டன.
ரஷ்யாவின் கொரோனா ஹாட்ஸ்பாட்டாக மாறி உள்ள மாஸ்கோவில் அத்தியாவசிய தேவைகளுக்கு அன்றி மக்கள் வெளியே நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் அதன் சுமார் ஒன்றே கால் கோடி மக்களும் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர். மாஸ்கோவில் மட்டும் 16000 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
ரஷ்யாவில் புதிதாக 3448 பேருக்கு தொற்று உறுதியானதை தொடர்ந்து நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 28 ஆயிரத்தை நெருங்குகிறது. ரஷ்யாவில் கொரோனாவுக்கு இதுவரை 232 பேர் பலி ஆகி உள்ளனர்.
Comments