தீரன் சின்னமலையின் 265ஆவது பிறந்தநாள் விழா திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை

0 1465
தீரன் சின்னமலையின் 265ஆவது பிறந்தநாள் விழா திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை

தீரன் சின்னமலையின் 265ஆவது பிறந்தநாள் விழாவையொட்டி, அவரின் உருவ படத்துக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த படத்துக்கு அவர் மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் திமுக மூத்த தலைவர் துரை முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து முகநூலில் வெளியிட்ட பதிவில், பிரிட்டிசாரின் ஆதிக்கத்துக்கு எதிராக யார்க்கும் எவர்க்கும் அஞ்சாமல் படை நடத்திய வீரதீரன் தியாகி சின்னமலை என்றும், தனது அதிகாரம் நிலைத்தால் போதும் என எண்ணாமல் நாடு சுதந்திரம் அடைய வேண்டும் என்ற இலக்கை நோக்கி இன்னுயிர் ஈந்த மாவீரன் என்றும் கூறியுள்ளார்.

தூக்குக் கயிற்றை முத்தமிடும் போதும் இலட்சியம் மாறாதவர் தீரன் சின்னமலை, அவர் பேரைச் சொல்லி வீரம் பெறுவோம், நினைவைப் போற்றி கொள்கை வெல்வோம் எனவும் ஸ்டாலின் கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments