கடனை திருப்பிக் கேட்டதால் கள்ளக்காதலன் மூலம் கொலை செய்ததாக பெண் கைது

0 1944
தஞ்சை அருகே கொடுத்த கடனை திருப்பிக் கேட்டதால் விவசாயியை கள்ளக்காதலன் மூலம் கொலை செய்ததாக பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

தஞ்சை அருகே கொடுத்த கடனை திருப்பிக் கேட்டதால் விவசாயியை கள்ளக்காதலன் மூலம் கொலை செய்ததாக பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

மருங்குளத்தைச் சேர்ந்த சுபாஷ் சந்திரபோஸ் என்பவர், அவரது வாழைத் தோட்டத்தில் கடந்த 13 ஆம் தேதி தலையில் வெட்டுக்காயத்துடன் சடலமாக மீட்கப்பட்டார்.

உடலைக் கைப்பற்றி போலீஸ் விசாரணை நடத்தியதில், பூங்கொடி என்பவருக்கு 5 ஆண்டுகளுக்கு முன்பு சுபாஷ் ஒரு லட்சம் ரூபாய் கடன் கொடுத்தது தெரியவந்தது.

மேலும், பூங்கொடியிடம் கொடுத்த கடனை சுபாஷ் அடிக்கடி கேட்டு வந்ததாகவும், இதில் ஆத்திரமடைந்த பூங்கொடி, பணத்தை தருவதாக பொய் கூறி சுபாசை வாழைதோப்புக்கு வரவழைத்ததாகவும் கூறப்படுகிறது.

அங்கு மறைந்திருந்த பூங்கொடியின் ஆண் நண்பன் இளங்கோவன் அரிவாளால் சுபாஷை வெட்டி கொன்றது விசாரணையில் தெரியவந்தையடுத்து பூங்கொடி, அவரது கணவர் அய்யாசாமி மற்றும் இளங்கோவனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments