மேலும் 3 வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டித்தது பிரிட்டன்
கொரோனா ஊரடங்கை மேலும் 3 வாரங்களுக்கு நீட்டிப்பதாக பிரிட்டன் அரசு அறிவித்துள்ளது.
ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் ஊரடங்கு மற்றும் சமூக இடைவெளியால் நல்ல பலன் கிடைத்துள்ளதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் டொமினிக் ராப் (Dominic Raab ) லண்டனில் தெரிவித்தார்.
கொரோனா வைரசுக்கு எதிரான இரண்டாம் கட்ட போராட்டம் தொடர்வதாக தெரிவித்த அவர், இந்த நேரத்தில் சமூக இடைவெளியை கைவிட்டால் தொற்று அபாயம் அதிகரித்துவிடும் எனவும் கூறினார். இதே கருத்தை ஆமோதித்துள்ள பிரிட்டன் சுகாதார அமைச்சர் நாடின் டோரிஸ் (Nadine Dorries) தடுப்பூசி கண்டுபிடித்தால் மட்டுமே ஊரடங்கில் இருந்து முழுமையாக விடுபட வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளார்.
Comments