இந்தியாவின் பல பகுதிகளில் வழக்கத்தை விட அதிக வெப்பம் பதிவு

0 2519
இந்தியாவின் பல பகுதிகளில் வழக்கத்தை விட அதிக வெப்பம் நிலவி வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் பல பகுதிகளில் வழக்கத்தை விட அதிக வெப்பம் நிலவி வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து அந்த மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,   விதர்பா, மராத்வாடா பகுதிகளும், மத்திய பிரதேச மேற்கு பகுதி, ஹரியானா, டெல்லி, சண்டீகர், உத்தரப் பிரதேச மேற்கு பகுதி ஆகியவற்றில் 40 டிகிரி செல்சியசுக்கு  அதிகமாக தட்ப வெப்ப நிலை பதிவாகியிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

மேகாலயம், ஜம்மு-காஷ்மீர், இமாசல பிரதேசம், அருணாசல பிரதேசம், பஞ்சாப், ஹரியானா, சண்டீகர், டெல்லியிலுள்ள சில இடங்கள் ஆகியவற்றில் அதிகபட்ச வெப்ப நிலை வழக்கத்தை விட 5 டிகிரி அதிகமாகவும், ஜார்க்கண்ட், ஒடிசா, மேற்குவங்கத்தின் கங்கை டெல்டா பகுதி (Gangetic West Bengal), தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் அதிகப்பட்ச வெப்ப நிலை வழக்கத்தை விட 3 டிகிரி அதிகமாகவும் பதிவாகியிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments