தவறான வதந்தியால் அரசுப் பள்ளி முன்பு முற்றுகையில் ஈடுபட்ட பொதுமக்கள்
சென்னை எர்ணாவூரில் அரசு பள்ளியில் கொரோனா அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்த உள்ளதாக வதந்தி பரவியதால் பொதுமக்கள் நள்ளிரவில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பகுதி வாரியாக முழுமையாக பரிசோதனை செய்ய 40 இடங்களில் சுகாதாரத் துறையினர் முகாம்களை அமைத்துள்ளனர். இதற்காக சுனாமி குடியிருப்பில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் தூய்மைப் பணிகள் நடைபெற்ற நிலையில், அங்கு கொரோனா அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்த உள்ளதாக வதந்தி பரவியது.
இதை நம்பிய மக்கள் தங்களுக்கு நோய் தொற்று ஏற்படும் என எதிர்ப்பு தெரிவித்து, பள்ளி முன்பு திரண்டு முற்றுகையில் ஈடுபட்டனர். கொரோனா பரிசோதனை செய்வதற்காகவே பணிகள் நடைபெற்றதாக போலீசார் கூறியும் கேட்காத மக்கள், மாநகராட்சி அதிகாரிகள் உத்தரவாதம் அளிக்கக்கோரி பல மணி நேரமாக கலையவில்லை. அப்போது யாரும் தனிமனித விலகலையும் கடைப்பிடிக்கவில்லை.
Comments