ரெம்டிசிவிர் மருந்தைக் கொரோனா நோயாளிகளுக்குக் கொடுத்ததில் விரைவில் குணமடைவதாக ஆய்வில் தகவல்
ரெம்டிசிவிர் என்கிற மருந்தை உட்கொண்ட கொரோனா நோயாளிகள் விரைந்து குணமடைந்திருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவ வல்லுநர்கள் கிலீட் சயின்சஸ் என்கிற நிறுவனம் தயாரித்த ரெம்டிசிவிர் என்கிற மருந்தைத் தீவிர சுவாசக் கோளாறு இருந்த கொரோனா நோயாளிகளுக்குக் கொடுத்து சோதனை நடத்தியுள்ளனர்.
இந்த மருந்தை உட்கொண்ட நோயாளிகளில் இருவரைத் தவிர அனைவரும் ஒருவாரத்துக்குள் முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இருவர் மட்டும் நோயின் தீவிரத்தால் உயிரிழந்ததாக மருத்துவர் கேத்லீன் முல்லன் ஒரு வீடியோவில் தெரிவித்துள்ளார்.
தேசிய நலவாழ்வு மையம் ரெம்டிசிவிர் உட்படப் பல்வேறு மருந்துகளை நோயாளிகளுக்குக் கொடுத்துப் பரிசோதித்து வருவதாகவும் கேத்லீன் முல்லர் தெரிவித்துள்ளார்.
Comments