சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் நாடு திரும்ப முடியாமல் இலங்கையில் சிக்கி தவிப்பு
இலங்கை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருவதாக வேதனை கூறும் வீடியோ வெளியாகியுள்ளது.
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட புதுக்கோட்டை மற்றும் நாகை மாவட்டங்களை சேர்ந்த எட்டு மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர். கொரோனா ஊடரங்கால் நாடு திரும்ப முடியாமல் சிக்கி இருக்கும் அவர், உணவு மற்றும் தங்க இடமின்றி கடும் சிரமப்பட்டு வருவதாகவும், எனவே மத்திய அரசும் தமிழக அரசும் தங்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
Comments