கொரோனா பரிசோதனைக் கருவிகள் விநியோகம் செய்ய அனுமதி

0 1592
கொரோனா பரிசோதனைக் கருவிகள் விநியோகம் செய்ய அனுமதி

கொரோனா பரிசோதனையை வேகப்படுத்தும் ஆன்டி பாடி (anti body) கருவிகள் விநியோகம் செய்வதற்கு மத்திய அரசு 67 இந்திய நிறுவனங்களுக்கு அங்கீகாரம் அளித்துள்ளது.

மத்திய மருந்துகள் தரக்கட்டுப்பாட்டு அமைப்பான CDSCO வின் ஒப்புதல் இந்த நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சீனா, கொரியா, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகளிடமிருந்து பலலட்சம் பரிசோதனைக் கருவிகளை இறக்குமதி செய்ய முடியும்.

சீனாவில் இருந்து சுமார் 5 லட்சம் பரிசோதனைக் கருவிகள் நேற்று டெல்லி வந்து சேர்ந்தன. மேலும் 30 லட்சத்துக்கும் அதிகமான பரிசோதனைக் கருவிகளை இந்தியா அடுத்த சில வாரங்களில் இறக்குமதி செய்ய உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments