ரயில்,பேருந்து, ஆட்டோ ஆகியவற்றின் போக்குவரத்து நிறுத்தத்தால் சாலைகளை ஆக்கிரமித்த மாட்டு வண்டிகள்..!

0 1408
சாலைகளை ஆக்கிரமித்த மாட்டு வண்டிகள்..!

ரயில்,பேருந்து, ஆட்டோ, டாக்சி உள்பட அனைத்துப் போக்குவரத்துகளும் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் தலைநகர் டெல்லியின் சாலைகளில் மாட்டு வண்டிகளும் சைக்கிள்களும் ஓடத் தொடங்கிவிட்டன.

இவை ஏழை எளிய மக்களின் புதிய போக்குவரத்து வசதிகளாக மாறியுள்ளன. மூன்று சக்கர சைக்கிள் வண்டிகளும் சாலைகளில் ஆட்களை ஏற்றிச் செல்கின்றன.

ஊரடங்கு காலத்திலும் அவசியத் தேவைகளுக்காக மக்கள் இந்த போக்குவரத்து வசதியையே பெரிதும் நம்பியுள்ளனர். சரக்குகளை ஏற்றிச்செல்லவும் மாட்டு வண்டிகள் உதவுவதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments