இந்திய ரயில்வேயின் 167வது ஆண்டு நிறைவுவிழா கொண்டாட்டம்
இந்திய ரயில்வே தனது 167வது ஆண்டு நிறைவை எந்த பயணிகளும் இல்லாமல் கொண்டாடியது.
ஊரடங்கு காரணமாக அனைத்து பயணிகள் ரயில்களும் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக நிறுத்தப்பட்டுள்ளன. ரயில்வே தொடங்கப்பட்ட பின், அதன் வரலாற்றில் முதன் முறையாக ரயில்வே முழுவதுமாக நீண்டநாட்கள் முடங்கியுள்ளது. பல லட்சம் பயணிகள் தினமும் வந்து செல்லும் டெல்லி, மும்பை, சென்னை, ஹவுரா உள்ளிட்ட பல்வேறு முக்கிய ரயில் நிலையங்கள் ஆள்அரவமின்றி வெறிச்சோடி காணப்படுகின்றன.
1853ல் மும்பையில் இருந்து தானேக்கு முதல் ரயில் இயக்கப்பட்டது. அதன்பின்னர், பேரிடர் காலங்களிலோ, உலகப் போரின்போதோ கூட இத்தனை நாட்கள் தொடர்ந்து ரயில்கள் இயக்கப்படாமல் இருந்ததே இல்லை. கொரோனாவை தடுக்கும் நடவடிக்கையாக ரயில்வேயின் இயக்கம் முழுவதுமாக முடங்கியுள்ளது.
Comments