பொருளாதார மேம்பாட்டுக்கு மூன்று கட்ட திட்டங்களை செயல்படுத்த உள்ளதாக அதிபர் டிரம்ப் அறிவிப்பு
அமெரிக்காவில் மீண்டும் பொருளாதார மேம்பாட்டுக்கு மூன்று கட்ட திட்டங்களை செயல்படுத்த உள்ளதாக அறிவித்தார் அதிபர் டிரம்ப்.
7 மாகாண ஆளுநர்களுடன் காணொலி மூலம் கலந்துரையாடிய அவர், தனிநபர் இடைவெளியை கடைபிடிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார். மிகவும் அதிகமாக கொரோனா பாதிப்புடைய பகுதிகளில் மக்களை கட்டுக்குள் வைப்பது குறித்தும் அவர் ஆலோசனை நடத்தினார்.
குறைந்த அளவு பாதிப்புடைய பகுதிகளில் கட்டுப்பாடுகளைத் தளர்த்தவும் டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார். வர்த்தகம், கல்வி நிலையங்கள் போன்றவற்றை மூன்று கட்டங்களாக மீண்டும் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. வைரஸ் பரவாமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கையாக ஒவ்வொரு கட்டமும் 14 நாட்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
நோய் பரிசோதனைக் கருவிகளும் நோயைத் தடுப்பதற்கான வசதிகளும் அவசியம் என்று தொழில்துறையினர் டிரம்ப்பிடம் வலியுறுத்தியுள்ளனர். அமெரிக்காவில் இயல்பு நிலை திரும்ப அதிக நாட்களாகலாம் என்றும், ஆண்டின் இறுதி வரை சமூக இடைவெளியை கைவிடுவதற்கான சூழல் இல்லை என்றும் அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.
Comments