உலகம் முழுவதும் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்து 45 ஆயிரத்தை தாண்டியது..!

0 2583
உலகம் முழுவதும் கொரோனா உயிரிழப்பு ஒரு லட்சத்து 45 ஆயிரத்தை தாண்டியது

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 45 ஆயிரத்தை தாண்டிவிட்டது. வைரஸ் தொற்றுக்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21 லட்சத்து 82 ஆயிரத்தை நெருங்கி வருகிறது.

உலகம் முழுவதும் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டோர் விவரமும், உயிரிழப்பு தகவல்களும் வெளியிடப்பட்டு உள்ளன. இதன்படி, அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 100க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 34 ஆயிரத்து 500 ஐ கடந்து விட்டது. அங்கு, 29 ஆயிரத்து 500 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆனதால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 லட்சத்து 77 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

இத்தாலியில் 525 பேர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 22 ஆயிரத்தை கடந்து, பட்டியலில் 2- வது இடத்தை பிடித்துள்ளது. ஸ்பெயினில் ஒரே நாளில் 500க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததால், பலி ஆனோர் எண்ணிக்கை 19 ஆயிரத்தை கடந்து விட்டது.

பிரான்சில் 17 ஆயிரம் பேர், உயிரிழந்து உள்ளனர். இங்கிலாந்தில் ஒரே நாளில் 861 பேர் பலி ஆனதால், உயிரிழப்பு 14 ஆயிரத்தை நெருங்கிவிட்டது.

ஈரான் மற்றும் பெல்ஜியத்தில் உயிரிழப்பு 5 ஆயிரத்தை நெருங்கி வருகிறது.

ஜெர்மனியில் உயிரிழப்பு 4 ஆயிரத்தைக் கடந்து விட்ட நிலையில் நெதர்லாந்தில், உயிரிழப்பு 3 ஆயிரத்து 300ஐத் தாண்டி விட்டது.

சீனாவை பொறுத்த வரை, உயிரிழப்பு 3 ஆயிரத்து 342 என்ற நிலையில் உள்ளது.

பிரேசிலில் உயிரிழப்பு 2 ஆயிரத்தை நெருங்க, கனடாவில் பலி எண்ணிக்கை ஆயிரத்து 200ஐ நெருங்கி விட்டது.

ஸ்வீடனில் ஆயிரத்து 133 பேரும் சுவிட்சர்லாந்தில் ஆயிரத்து 281 பேரும், கொரோனாவால் உயிரிழந்தனர்.

உலகம் முழவதும் ஒரே நாளில் 94 ஆயிரத்து 800 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆனதால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21 லட்சத்து 81 ஆயிரத்தை கடந்துள்ளது. அதேநேரம், ஒரே நாளில் 7 ஆயிரம் பேர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 500 நெருங்கி வருகிறது.

இதுவரை 5 லட்சத்து 47 ஆயிரம் பேர், குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். கவலைக்கிடமான நிலையில் இருப்போர் மட்டும் 57 ஆயிரம் பேர் என அறிவிக்கப்பட்டு உள்ளது. உலகம் முழுவதும் நிமிடத்திற்கு நிமிடம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. மற்றொரு பக்கம், நொடிக்கு நொடி, உயிரிழப்பு உயர்ந்து வருவதால், மக்கள் செய்வதறியாது திகைத்துள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments