மகாராஷ்ட்ராவின் கொரோனா பாதிப்பு 3 ஆயிரத்தைத் தாண்டியது

0 1135
மகாராஷ்ட்ராவின் கொரோனா பாதிப்பு 3 ஆயிரத்தைத் தாண்டியது

இந்தியாவில் 3 ஆயிரம் கொரோனா பாதிப்புடையவர்கள் என்ற நிலையை எட்டிய முதல்மாநிலமாக மகாராஷ்ட்ரா உள்ளது.

இங்கு பாதிக்கப்பட்ட 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களில் மும்பையில் மட்டும் 2 ஆயிரம் பேருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. நேற்று ஒரே நாளில் 177 பேருக்கு புதிதாக நோய்த் தொற்று பரவியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஒரே நாளில் 7 பேர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்ததால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 194 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களுக்கு ஏற்கனவே இருதயம், நீரிழிவு, ஆஸ்துமா போன்ற நீண்டகால நோய்கள் இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் இதுவரை 56 ஆயிரம் பேரின் மாதிரிகளை பரிசோதித்துள்ளனர். 300க்கும் மேற்பட்டோர் சிகிச்சையால் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் அடுத்த வாரம் முதல் தொழில்துறையினருக்காக சில கட்டுப்பாடுகளைத் தளர்த்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments