மளிகை விலையை இப்படியும் குறைக்கலாம்..! விக்கிரமராஜாவும் வியாபாரிகளும்

0 7735
சென்னையில், மளிகை பொருட்களின் விலைப் பட்டியலை வெளியிட்டு வியாபாரிகளை நியாயமானவர்கள் என வணிகர் சங்கபேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா காட்டிக் கொண்ட நிலையில் , அவர்சென்ற சிறிது நேரத்தில் கடைகளில் வைக்கப்பட்ட விலைப்பட்டியல் அகற்றப்பட்டது.

சென்னையில், மளிகை பொருட்களின் விலைப் பட்டியலை வெளியிட்டு வியாபாரிகளை நியாயமானவர்கள் என வணிகர் சங்கபேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா காட்டிக் கொண்ட நிலையில் , அவர்சென்ற சிறிது நேரத்தில் கடைகளில் வைக்கப்பட்ட விலைப்பட்டியல் அகற்றப்பட்டது. விலையை குறைக்க விக்கிரமராஜாவும், அதனை மறைக்க வியாபாரிகளும்  நடத்தும் நாடகம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...

சென்னையில் உள்ள பல்வேறு கடைகளில் மளிகைப் பொருட்கள் தாறுமாறாக விலை ஏற்றி விற்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதனைத் தொடர்ந்து நியாயமான விலையில் பொருட்களை விற்பனை செய்வதாக பொதுமக்களுக்கு தெரிவிக்கும் விதமாக, அனைத்து கடைகளிலும் விலைப் பட்டியல் வைக்கும் நிகழ்ச்சி வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் நடத்தப்பட்டது.

வடபழனியில் உள்ள மளிகைக் கடைகளில் பொருட்களின் பெயர்களுடன் என்ன விலை என்பதை பெரிய பேனரில் குறிப்பிட்டு, அதனை பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா திறந்து வைத்தார். தொடர்ந்து வியாபாரிகள் பல்வேறு இடையூறுகளைக் கடந்து மக்களுக்கு நியாயமான விலையில் பொருட்களை விற்பனை செய்வதாக அவர் விளக்கினார்.

விலைப் பட்டியலை திறந்து வைத்து விக்கிரமராஜா காரில் ஏறிய சில நிமிடங்களுக்கெல்லாம், பெரும்பாலான மளிகைக் கடைகளில் விலைப் பட்டியல் பேனர் அகற்றப்பட்டது.

வண்டி வாடகை உயர்வு, வேலையாள் பற்றாக்குறை என ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி விலை உயராத பொருட்களைக் கூட வாடிக்கையாளர்களுக்கு தினம் ஒரு விலைக்கு விற்பதை வாடிக்கையாக கொண்ட ஒரு சில கொள்ளை லாப வியாபாரிகள், சங்கத்திற்கோ, சங்கத் தலைவர் விக்கிரமராஜாவுக்கோ கட்டுப்படுவதில்லை என்று கூறப்படுகின்றது.

விக்கிரமாதித்தன் வேதாளம் போல, சில கொள்ளை லாப வியாபாரிகள் விக்கிரமராஜாவை இப்படி சர்ச்சையில் சிக்க வைத்து விடுகின்றனர் என்கின்றனர் நியாயமான விலைக்கு பொருட்களை விற்கும் வியாபாரிகள். மீண்டும் விலையை ஏற்றி விற்பதற்காகவே விலைப் பட்டியலை அகற்றியதாகவும் கூறப்படுகின்றது.

இந்த நிலையில் மளிகைக் கடைகளில் பொருட்களின் விலைப் பட்டியலை, மக்களுக்கு தெரியும் வகையில் காட்சிப்படுத்த வேண்டும் என்ற சட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களுக்கு மளிகைப் பொருட்கள் நியாயமான விலையில் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments