ஊரடங்கு முகாம்களில் தங்கி இருக்கும் வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு ரூ. 2000 ஊக்கத்தொகை - ஆந்திர அரசு அறிவிப்பு
ஊரடங்கு முடியும் வரை நிவாரண முகாம்களில் தங்கி இருக்கும் வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு இரண்டாயிரம் ரூபாய் ஊக்கத் தொகை வழங்க ஆந்திர மாநில அரசு முடிவெடுத்துள்ளது.
ஆந்திர மாநிலத்தில் நிவாரண முகாம்களில் இருந்த வெளிமாநிலத் தொழிலாளர்களில் பலர், ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால் அங்கிருந்து வெளியேறிக் கால்நடையாகச் சொந்த ஊர்களுக்குப் புறப்பட்டுச் செல்வதாகச் செய்திகள் வந்தன.
இதையடுத்துத் தொழிலாளர்களுக்குப் பால், பழம், காய்கறி, முட்டை உள்ளிட்ட சத்தான உணவுகளை வழங்குமாறு அதிகாரிகளிடம் முதலமைச்சர் ஜெகன்மோகன் ஆலோசனை கூறியுள்ளார்.
அதேபோல் ஊரடங்கு காலம் முடியும் வரை முகாம்களில் தங்கும் தொழிலாளர்களுக்கு இரண்டாயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கவும் ஜெகன்மோகன் முடிவெடுத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Comments