தமிழகத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 42 பேர் இன்று ஒரே நாளில் குணமடைந்து டிஸ்சார்ஜ்

0 6059
தமிழகத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற வந்த 42 பேர் இன்று ஒரே நாளில் குணமடைந்து டிஸ்சார்ஜ்

தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த 42 பேர் இன்று ஒரே நாளில் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

டெல்லி மாநாட்டுக்கு சென்று வந்து கொரோனா உறுதியான இருவர் குணமடைந்து சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் வழியனுப்பி வைக்கப்பட்டனர். ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இருந்து 5 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். சேலம் அரசு மருத்துவமனையில் காலையில் 5 இந்தோனேஷியர்களும் மாலையில் தம்மம்பட்டியைச் சேர்ந்த இருவரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 18 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். கடலூரில் 5 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் குணமடைந்த கும்பகோணத்தை சேர்ந்தவர் வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டார். நெல்லை அரசு மருத்துவகல்லூரியில் இருந்து 4 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். புதுச்சேரியிலும் ஒருவர் குணமடைந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments