கொரோனா வீரியம்: உயரும் உயிரிழப்பு..!

0 7388
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. உயிரிழப்பு 420 ஐ எட்டி உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், மஹாராஷ்டிராவில், கொரோனாவால் 187 பேர் பலியாகி உள்ளனர். அங்கு மட்டும்
பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 ஆயிரத்தை நெருங்கி வருகிறது.

மும்பையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் தாராவியில், ஒரே நாளில் 26 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகி , பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 86 ஆக உயர்ந்துள்ளது. தாராவியில் மட்டும் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

டெல்லியை பொறுத்தவரை, வைரஸ் தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை ஆயிரத்து 578 . உயிரிழப்பு 32 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் ஒரே நாளில் 25 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆனதால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்து 267 ஆக உயர்ந்தது. அதேநேரம், உயிரிழப்பு 15 ஆக உயர்ந்தது.

மத்திய பிரதேசத்தில் பாதிப்பு ஆயிரத்து 120 ஆகவும், உயிரிழப்பு 53 ஆகவும் அதிகரித்துள்ளது. ராஜஸ்தானில் ஆயிரத்து 104 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது.

குஜராத்தில் - 871 , உத்தரபிரதேசத்தில் 773 , தெலங்கானாவில் 698 , ஆந்திரா - 534 , கேரளா - 388 , கர்நாடகா - 315 , ஜம்மு- காஷ்மீர் - 314 , மேற்கு வங்காளம் 231
மற்றும் ஹரியானாவில் 205 பேரும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

நாடு முழுவதும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. கொரோனாவால் 420 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை, ஆயிரத்து 514 பேர் குணம் அடைந்து, வீடு திரும்பி உள்ளனர். கொரோனாவை ஒழிக்க, மத்திய - மாநில அரசுகள், போர்க்கால அடிப்படையில் பணிகளை முடுக்கி விட்டுள்ளன.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments