சிவப்பு மண்டல பகுதியில் ஊரடங்கு நடைமுறை தொடர்ந்து நீடிக்கும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

0 36479
தமிழகத்தில் அறிவிக்கப்பட்டு உள்ள சிவப்பு மண்டல பகுதிகளில் தற்போதைய ஊரடங்கு நடைமுறைகள் தொடர்ந்து அமலில் இருக்கும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் அறிவிக்கப்பட்டு உள்ள சிவப்பு மண்டல பகுதிகளில் தற்போதைய ஊரடங்கு நடைமுறைகள் தொடர்ந்து அமலில் இருக்கும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

சென்னை - தலைமை செயலகத்தில் காணொலி காட்சி மூலம் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆய்வு நடத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
ஏப்ரல் 20 ம் தேதிக்குப்பின், அமல் படுத்தப்பட இருக்கும் ஊரடங்கு தளர்வுகள் குறித்து,
முடிவு எடுக்க தனி குழு அமைக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு, 2 வது கட்டத்தில் தொடர்ந்து இருப்பதாக கூறிய அவர்,வைரஸ் தொற்று, கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளதாக விளக்கம் அளித்தார்.

தடை செய்யப்பட்ட பகுதிகளில் வீடுகளில் முடங்கி கிடக்கும் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் தங்கு தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments