சீனாவிலிருந்து 5 லட்சம் கொரோனா சோதனைக் கருவிகள் வந்துள்ளன - மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்

0 3100
சீனாவிலிருந்து 5 லட்சம் கொரோனா சோதனைக் கருவிகள் வந்துள்ளன - சுகாதார அமைச்சகம்

அதிவிரைவுப் பரிசோதனைக் கருவிகள் உட்பட 5 லட்சம் கொரோனா பரிசோதனைக் கருவிகள் சீனாவில் இருந்து வந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தொண்டை, மூக்கில் இருந்து மாதிரி எடுத்து ஆய்வு செய்யும் 33 லட்சம் ஆர்.டி. பி.சி.ஆர். கருவிகளும் ரத்தத்தில் கொரோனா எதிர்ப்பணுக்கள் உருவாகியுள்ளதா என ஆய்வு செய்து பாதிப்பை உறுதி செய்யும் 37 லட்சம் அதிவிரைவுப் பரிசோதனைக் கருவிகளும் கொள்முதல் செய்யப்படுவதாகவும் அவை விரைவில் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் இந்திய மருத்துவக் ஆய்வுக் கழகம் ஏற்கனவே தெரிவித்திருந்தது.

இந்நிலையில் சீனாவில் உள்ள இரு நிறுவனங்களிடம் இருந்து அதிவிரைவுப் பரிசோதனைக் கருவிகள் உட்பட 5 லட்சம் பரிசோதனைக் கருவிகள் வந்து சேர்ந்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments