UPSCஐத் தொடர்ந்து ஊரடங்கால் SSC தேர்வுகளும் ஒத்திவைப்பு

0 2496
ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் UPSCஐத் தொடர்ந்து மத்திய பணியாளர் தேர்வாணையமும் (Staff Service Commission) மே 3ம் தேதி வரை பட்டியலிடப்பட்டிருந்த அனைத்து தேர்வுகளையும் ஒத்திவைத்துள்ளது.

ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் UPSCஐத் தொடர்ந்து மத்திய பணியாளர் தேர்வாணையமும் (Staff Service Commission) மே 3ம் தேதி வரை பட்டியலிடப்பட்டிருந்த அனைத்து தேர்வுகளையும் ஒத்திவைத்துள்ளது.

அதே சமயம் மே-3ம் தேதிக்கு பிறகு பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து தேர்வுகளும் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் புதிய தேர்வு அட்டவணை வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல் ஏப்ரல் முதல்வாரத்தில் நடைபெறவிருந்து ஒத்திவைக்கப்பட்டுள்ள JEE நுழைவுத்தேர்வை மே இறுதி வாரத்தில் நடத்துவது குறித்து ஆலோசித்து வருவதாக தேசிய தேர்வு முகமை (NTA) ஏற்கனவே அறிவித்திருந்தது.

இந்நிலையில் JEE தேர்வு ஜூலை முதல் வாரத்தில் நடத்தப்படும் என இணையத்தில் வலம் வரும் சுற்றறிக்கை போலியானது என விளக்கமளித்துள்ள தேசிய தேர்வு முகமை, மாணவர்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments