கொரோனா தடுப்பில் இந்தியாவின் நிதி, சுகாதார கொள்கைகள் சரியானவை - சர்வதேச நிதியம் பாராட்டு
கொரோனா தடுப்பில் இந்திய அரசு அறிவித்துள்ள நிதியுதவி திட்டங்கள் மற்றும் நாடு தழுவிய ஊரடங்கை முழுமையாக ஆதரிப்பதாக சர்வதேச நிதியம் தெரிவித்துள்ளது.
பேட்டி ஒன்றில் இதைத் தெரிவித்துள்ள அதன் ஆசிய-பசிபிக் பிரிவு இயக்குநர் சாங் யோங் ரீ (Chang Yong Rhee) கொரோனாவால் பாதிப்புக்குள்ளாகி வரும் இந்திய பொருளாதாரத்தை நிலைப்படுத்துவதற்கு ரிசர்வ் வங்கி எடுத்துள்ள நடவடிக்கைகளை பாராட்டுவதாகவும் கூறியுள்ளார்.
இது நிதிநிறுவனங்களுக்கும் கடன் வாங்கியவர்களுக்கும் பெரிய ஆசுவாசமாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
கொரோனாவை தடுக்கும் முயற்சியில் தேவைப்பட்டால் ஊரடங்கை நீட்டிப்பதிலும் தவறில்லை என்ற அவர், அதே நேரம் இந்தியாவில் மருத்துவ கட்டமைப்பு வசதிகளை மேலும் அதிகரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.
Comments