கொரோனா வைரசின் மரபணு வரிசை வெற்றிகரமாக அடையாளம்: குஜராத் பயோடெக்னாலஜி ஆய்வு மைய விஞ்ஞானிகள் சாதனை

0 1700
கொரோனா வைரசின் மரபணு வரிசை வெற்றிகரமாக அடையாளம்

நாட்டிலேயே முதன்முறையாக குஜராத் அரசு ஆய்வக விஞ்ஞானிகள் கொரோனாவைரசின் மரபணு வரிசையை வெற்றிகரமாக அடையாளப்படுத்தி உள்ளனர்.

குஜராத் பயோடெக்னாலஜி ஆய்வு மைய விஞ்ஞானிகளின் இந்த சாதனை, வைரசின் ஆதிமூலத்தை கண்டறிவதற்கும், மருந்து மற்றும் தடுப்பூசி கண்டுபிடிப்புக்கும் பெரிதும் உதவியாக இருக்கும் என கூறப்படுகிறது.

கொரோனா தொற்று பாதித்த நபர்களிடம் இருந்து பெறப்படும் மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டு வைரசின் மரபணு வரிசை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விஞ்ஞானிகளின் இந்த கண்டுபிடிப்பை குஜராத் முதலமைச்சர் அலுவலகம் டுவிட்டரில் பாராட்டி உள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments