உள்நாட்டிலேயே தயாராகும் ரேபிட் டெஸ்ட் கிட்டுகள்: தயாரிப்பு பணியில் இந்திய நிறுவனங்கள் தீவிரம்

0 3237
உள்நாட்டிலேயே தயாராகும் ரேபிட் டெஸ்ட் கிட்டுகள்

கொரோனா தொற்றை விரைவாக கண்டுபிடிக்க உதவும் ரேபிட் டெஸ்ட் கிட்டுகளை தயாரிக்கும் பணியில் இரண்டு இந்திய நிறுவனங்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.

மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பின் உரிமங்களை பெற்று டெல்லியில் உள்ள வான்கார்ட் டயாக்னாஸ்டிக்ஸ் (Vanguard Diagnostics) என்ற நிறுவனமும், கேரளாவில் உள்ள இந்திய அரசு நிறுவனமான இந்துஸ்தான் லேட்டக்ஸ் நிறுவனமும் ரேபிட் டெஸ்ட் கிட்டுகளின் உற்பத்தியை துவக்கி உள்ளன.

இந்துஸ்தான் லேட்டக்ஸ் நிறுவனம் இன்னும் 4 அல்லது 5 தினங்களில் ஒரு லட்சம் கிட்டுகளை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வான்கார்டு 3 வாரங்களில் அவற்றை வழங்குவதாக தெரிவித்துள்ளது. இவை தவிர குஜராத்தில் உள்ள வாக்ஸ்டர் பயோ லிமிட்டட் (Voxtur Bio Limited) விரைவில் உற்பத்தியை துவக்கும் எனவும் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments