கொரோனா எங்கிருந்து பரவியது என்ற உண்மையை சீனா வெளியிட வேண்டும்- அமெரிக்கா வலியுறுத்தல்
கொரோனா வைரஸ் எங்கிருந்து பரவியது என்பது குறித்த உண்மைத் தகவல்களைச் சீனா ஒளிவு மறைவின்றி வெளியிட வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
ஊகான் ஆய்வகத்தில் இருந்து வைரஸ் பரவியுள்ளதாக பாக்ஸ் நியூஸ் உள்ளிட்ட செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இந்நிலையில் வாஷிங்டனில் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், ஊகான் ஆய்வகத்தில் இருந்து வைரஸ் பரவியதா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார்.
அதேபோல் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோவும், கொரோனா தொடர்பான தகவல்களைச் சீனா ஒளிவுமறைவின்றி வெளியிட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
நோயைக் கட்டுப்படுத்துவதற்கும், எதிர்காலத்தில் நோய் பரவினால் தடுப்பதற்கும் உண்மைத் தகவல்கள் உதவியாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
Comments