மளிகை பொருள்களை அதிக விலைக்கு விற்றால் வணிகர் சங்கத்திலிருந்து நீக்கம் என எச்சரிக்கை
மளிகை பொருள்களை அதிக விலைக்கு விற்கும் வணிகர்கள் தமிழ்நாடு வணிகர் சங்க கூட்டமைப்பிலிருந்து நீக்கப்படுவார்கள் என அதன் தலைவர் விக்கிரமராஜா எச்சரித்துள்ளார்.
144 தடை உத்தரவு அமலில் இருப்பதால் பொருள்களின் வரத்து இல்லை எனத் தெரிவித்து, மளிகை பொருள்களை வணிகர்கள் அதிக விலைக்கு விற்பதாக குற்றம்சாட்டப்பட்டுகிறது.
இந்நிலையில் வடபழனியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழகம் முழுவதும் மளிகை பொருள்களுக்கான விலை பட்டியலை விக்கிரமராஜா வெளியிட்டார்.
Comments