ஊரடங்கை மதிக்காமல் நடைப்பயிற்சி வந்தவர்களை யோகாசனம் செய்ய வைத்த காவல்துறையினர்
மகாராஷ்டிர மாநிலம் புனேயில் ஊரடங்கு விதிகளை மீறிச் சாலையில் நடமாடியவர்களைக் காவல்துறையினர் பிடித்து யோகாசனம் செய்ய வைத்துத் திருப்பி அனுப்பினர்.
மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் இன்றியமையாத் தேவைகளைத் தவிர மற்ற எதற்காகவும் வெளியே வர வேண்டாம் என அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
அதேபோல் முகக்கவசம் அணியாமல் வெளியே வரக்கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலம் புனேயில் காலையில் நடைப்பயிற்சிக்கு வந்தவர்களைக் காவல்துறையினர் தடுத்து நிறுத்திச் சாலையிலேயே யோகாசனம் செய்ய வைத்ததுடன், ஊரடங்குக் காலம் வரை நடைப்பயிற்சிக்கு வரவேண்டாம் என அறிவுரை கூறித் திருப்பி அனுப்பி வைத்தனர்.
Comments