இந்தியா வந்தடையும் சீனாவின் 3 லட்சம் ரேபிட் டெஸ்ட் கருவிகள்
கொரோனா தொற்றை உடனடியாக கண்டறியும் 3 லட்சம் ரேபிட் டெஸ்ட் கருவிகள் இன்று சீனாவில் இருந்து இந்தியாவுக்கு கிடைக்க உள்ளன.
சீனாவின் குவாங்சுவோ சுங்கத்துறை அதிகாரிகளால் அனுமதிக்கப்பட்டு டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்ட இந்த சோதனைக் கருவிகள் டெல்லியை இன்று வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த ஓரிரு வாரங்களில் சுமார் 20 முதல் 30 லட்சம் ரேபிட் டெஸ்ட் கருவிகள் இந்தியாவுக்கு கிடைக்க உள்ளன. சீனாவின் சோதனைக்கருவிகள் தரமற்றவை என்று பல நாடுகளால் நிராகரிக்கப்பட்டன. இதையடுத்து இக்கருவிகளை உற்பத்தி செய்யும் தரமான கம்பெனிகள் குறித்த பட்டியலை சீன அரசு தயாரித்தது.
சோதனைக் கருவிகள் பரிசோதிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுவதால் வந்தடைவதில் தாமதம் ஏற்பட்டது.
Comments