கல்வி நிறுவனங்கள் கட்டணத்தைக் கேட்டு நெருக்குதல் தரக்கூடாது - மனித வள மேம்பாட்டுத் துறை
கல்வி நிறுவனங்கள் மற்றும் கல்லூரிகள் மாணவர்களிடம் கட்டணத்தை கேட்டு நெருக்குதல் தர வேண்டாம் என்று மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.
ஊரடங்கு முடியும் வரை கட்டணம் செலுத்தாதவர்களைப் பற்றி கவலைப்படாமல் ஆன் லைன் மூலம் பாடங்களைத் தொடருமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மே 3 வரை நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மாணவர்களிடம் கட்டணம் கேட்டு கல்விநிறுவனங்கள் நெருக்குதல் தருவதாக புகார்கள் எழுந்துள்ளன.
இயல்பு நிலை திரும்பும் வரை எந்த ஒரு நிறுவனமும் கட்டணத்தைக் கேட்கக் கூடாது என்று மத்திய அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. இதனை தங்கள் இணைய பக்கத்தில் அறிவிக்குமாறும் மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
Comments