குப்பையில் வீசப்பட்ட வாழைப்பழத்தை பொறுக்கி எடுத்து உண்ணும் தொழிலாளர்கள்

0 4993
ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால் உணவின்றித் தவிக்கும் தொழிலாளர்கள்

டெல்லியில் யமுனை நதி அருகே, குப்பையில் வீசப்பட்ட வாழைப் பழங்களில் இருந்து நல்ல பழங்களை எடுத்துச் சாப்பிடும் நிலைக்கு வெளி மாநில தொழிலாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு தொழில்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக வெளி மாநில தொழிலாளர்கள் நிலைமை மோசமாகியுள்ளது.

banana

இந்த நிலையில், டெல்லியில் யமுனை நதி அருகே நிகாம்போத் என்ற இடத்தில், குப்பையில் தூக்கி வீசப்பட்ட அழுகிய வாழைப்பழங்களில் இருந்து சிலவற்றை பொறுக்கி எடுத்து தொழிலாளர்கள் சாப்பிடுகின்றனர். இந்த அவலநிலை தொடர்பான வீடியோவும், புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன. 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments