நீரவ் மோடிக்கு எதிராக சிபிஐ இரு புதிய குற்றச்சாட்டுக்கள்
இங்கிலாந்து சிறையில் உள்ள இந்திய மோசடித் தொழிலதிபர் நீரவ் மோடி மேலும் இரு புதிய குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
மும்பையைச் சேர்ந்த வைரவியாபாரி நீரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு மோசடி செய்து பின்னர் இங்கிலாந்து தப்பிச் சென்றுவிட்டார். அங்கு கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள அவர், தன்னை ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என்று மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கில் சிபிஐ தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த மனுவில், நீரவ் மோடியை ஜாமீனில் விடுவித்தால் அவர், சாட்சியங்களைக் காணாமல் போகச் செய்து விடுவார் என்றும் சாட்சியங்களைக் கலைத்து விடுவார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போக வாய்ப்பிருப்பதாகக் கூறப்படும் நிலையில் நீரவ் மோடி மீதான மற்ற வழக்குகளை வரும் 28ம் தேதி விசாரிப்பதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Comments