கொரோனா பாதிப்பு ஊரடங்கு -விவசாயத்துக்கும் மீன்பிடித் தொழிலுக்கும் விலக்கு
கொரோனாவால் ஊரடங்கு இரண்டாவது முறையாக மேலும் 19 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்ட நிலையில் விவசாயிகளின் அறுவடைக்காலத்தை கவனத்தில் கொண்டு மத்திய அரசு அனைத்து விவசாயப் பணிகளுக்கும் ஊரடங்கில் இருந்து விலக்கு அளித்துள்ளது.
இந்த விலக்கு மீனவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு அனைத்து மாநில அரசுகளுக்கும் சில அறிவுறுத்தல்களை அனுப்பியுள்ளது. இதில் மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தின் ஜல் ஜீவன் இயக்கம் மூலமாக, நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் வீடுகளுக்குள் அடைந்து கிடக்கும் மக்களுக்கு தடையற்ற குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தப்பட்டுள்ளது.
விவசாயம், மீன்பிடித் தொழில் ஆகியவற்றுக்கு விலக்கு அளிக்கவும் விவசாயிகள் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் மத்திய அரசு ,சமூக இடைவெளியைப் பின்பற்றுதல் போன்ற சில நிபந்தனைகளுடன் 20ம் தேதி முதல் தளர்வு அறிவித்துள்ளது.
Comments