மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை...
ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளதை அடுத்து நிலவும் சூழல் தொடர்பாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.
தலைமை செயலகத்தில் காலை பத்து முப்பது மணிக்கு தொடங்கும் வீடியோ கான்பிரன்சிங் முறையிலான ஆலோசனைக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் கலந்துக் கொள்கின்றனர். இதில் முதலமைச்சருடன், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், வருவாய்த் துறை அமைச்சர் உதயகுமார், மற்றும் காவல்துறை சட்ட ஒழுங்கு டிஜிபி திரிபாதி ஆகியோர் பங்கேற்கின்றனர்.
Comments