நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11,933ஆக உயர்வு: ஒரே நாளில் 52 பேர் உயிரிழப்பு

0 2761
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11,933ஆக உயர்வு

இந்தியாவில் கொரோனாவுக்கு, ஒரே நாளில் 52 பேர் பலியானதால், உயிரிழப்பு 392 ஆக உயர்ந்துள்ளது. வைரஸ் தொற்றுக்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.

கொரோனாவின் தாக்கம், கடந்த சில நாட்களாக உயர்ந்து வரும் சூழலில், அடுத்தடுத்த நாட்களிலும் பாதிப்பு அதிகரிக்கக்கூடும் என கணிக்கப்பட்டு உள்ளது.

மஹாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் 117 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆனதால் அங்கு கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்து 800 ஐ தாண்டி விட்டது. மும்பையில் மட்டும் ஒரே நாளில் 66 பேர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

தலைநகர் டெல்லியில் கொரோனா பாதிப்பு ஆயிரத்து 561 ஆகவும், உயிரிழப்பு 30 ஆகவும் உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை, கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,242 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பு, 14ஆக அதிகரித்துள்ளது.

ராஜஸ்தானில் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்து 34 ஆக உயர்ந்துள்ளது. அங்கு மட்டும் 12 பேர் உயிரிழந்துள்ளனர். மத்திய பிரதேசத்தில் பாதிப்பு 730 ஆகவும், உயிரிழப்பு 50 ஆகவும் நீடிக்கிறது.

கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உத்தரபிரதேசத்தில் 660 ஆகவும், குஜராத்தில் 650 ஆகவும் , தெலங்கானாவில் 624 ஆகவும் உயர்ந்துள்ளது. கேரளாவில் 387 பேரும் , கர்நாடாகாவில் 277 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

ஜம்மு -காஷ்மீர் 278 , மேற்குவங்காளம் - 213 , ஹரியானா - 199 மற்றும் பஞ்சாப் - 176 பேரும் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11 ஆயிரத்து 933 என்றும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 392 என்றும், மத்திய சுகாதாரத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதனிடையே, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், அடுத்த இரண்டு, மூன்று வாரங்களுக்கு கொரோனாவின் பாதிப்பு மிகப்பெரிய அளவில் இருக்கும் என கூறியுள்ளார். நாடு முழுவதும் 400 மாவட்டங்களில் கொரோனா வைரஸ் நுழையவில்லை என்று ஹர்ஷ் வர்தன் விளக்கம் அளித்துள்ளார்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments