அதிமுக எம்.எல்.ஏவின் ஆதரவாளர்கள் இருவர் வெட்டிப் படுகொலை

0 2848
அதிமுக எம்.எல்.ஏவின் ஆதரவாளர்கள் இருவர் வெட்டிப் படுகொலை

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே அதிமுக எம்.எல்.ஏவின் ஆதரவாளர்கள் இருவர் மர்மநபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர்.

பண்ருட்டி எம்.எல்.ஏ சத்யா பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களான திருவதிகை பகுதியை சேர்ந்த பாலாஜி, மணிகண்டன் ஆகிய இருவரும் நேற்று இரவு வயலுக்கு நீர் பாய்ச்ச சென்றுள்ளனர்.

அப்போது அங்கு வந்த 10 பேர் கொண்ட கும்பல் இருவரையும் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், செல்லும் வழியிலேயே இருவரும் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா நிவாரணம் வழங்குவது தொடர்பாக ஏற்பட்ட மோதலே எம்எல்ஏ ஆதரவாளர்கள் கொலைக்கு காரணமா என்கிற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments