தம்மை தாமே தனிமைபடுத்திக் கொண்ட குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி

0 1900
குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி தம்மை தாமே தனிமைபடுத்திக் கொண்டுள்ளார்.

குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி தம்மை தாமே தனிமைபடுத்திக் கொண்டுள்ளார். அவர் தலைமையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் காடியா ஜமால்பூர் (Khadia-Jamalpur) தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ இம்ரான் கேடாவாலாவும் (Imran Khedawala) கலந்து கொண்டிருந்தார்.

அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளதால், முன்னெச்சரிக்கையாக விஜய் ரூபானி தம்மை தாமே தனிமைபடுத்தி கொண்டுள்ளார்.

இதுகுறித்து குஜராத் முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், விஜய் ரூபானி பூரண உடல்நலத்துடன் நன்றாக இருப்பதாகவும், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் குழு, கொரோனா அறிகுறி இல்லை என அறிக்கை அளித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத் அரசை காணொலி காட்சியின் வாயிலாகவும், தொலைபேசி அழைப்புகள் மூலமாகவும் ரூபானி வழிநடத்துவார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments