பொது இடங்களில் சமூக இடைவெளியைப் பின்பற்ற அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உத்தரவு
பொது இடங்களில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதை அதிகாரிகள் கண்காணிக் வேண்டும் எனவும், கண்காணிக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவலைத் தடுக்க காய்கறிக் கடைகள், மளிகைக் கடைகள், இறைச்சிக் கடைகளில் மக்கள் இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், இதைப் பின்பற்றாத கடைகள் மூடப்படும் எனவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனது டுவிட்டர் பக்கத்தில் இது குறித்துத் தெரிவித்துள்ளார். அதில், நாள் ஒன்றுக்கு இருமுறை பறக்கும் படையினர் காய்கறி, இறைச்சிக் கடைகளில் சமூக இடைவெளி பின்பற்றப்படுவதைக் கண்காணிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். இதனைப் பின்பற்றாத அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
நாள் ஒன்றுக்கு இருமுறை பறக்கும் படையினர் காய்கறி, இறைச்சி கடைகளில் சமூக இடைவெளி பின்பற்றப்படுவதை கண்காணிக்க வேண்டும்.
— SP Velumani (@SPVelumanicbe) April 15, 2020
இதனை பின்பற்றாத அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.#SocialDistancing #TN_Together_Against_Corona
Comments