ஆம்புலன்ஸ்கள் அனுப்பப்படாததால் மோட்டார் சைக்கிள்களில் சிகிச்சைக்கு அழைத்து செல்லப்பட்ட 2 பேர் பலி

0 1771

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் ஆம்புலன்ஸ்கள் அனுப்பப்படாததால் மோட்டார் சைக்கிள்களில் சிகிச்சைக்கு அழைத்து செல்லப்பட்ட 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

தனிமைபடுத்தப்பட்ட பகுதியான பட்வாலி சவுக்கியை (Badwali Chowki) சேர்ந்த 60 வயதான நபர் உடல்நிலை பாதிக்கப்படவே, தனியார் மருத்துவமனையை தொடர்பு கொண்டு ஆம்புலன்ஸ் அனுப்பி வைக்க குடும்பத்தினர் கூறினர். ஆனால் ஆம்புலன்ஸை அனுப்பி வைக்க அவர்கள் மறுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் மோட்டார் சைக்கிளில் அவர் அழைத்து செல்லப்பட்ட நிலையில், அங்கு அவர் இறந்துள்ளார். இன்னொரு தனிமைபடுத்தப்பட்ட இடமான காடக்புராவில் (Khadakpura ) 65 வயது நபர் ஒருவரும் இதேபோல் உயிரிழந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments