70 லட்சம் கொரோனா சோதனை கிட்டுகளுக்கு ஆர்டர்- ICMR
சுமார் 70 லட்சம் கொரோனா சோதனை கிட்டுகளுக்கு ஆர்டர் கொடுத்துள்ளதாகவும், அவை எந்த நேரத்திலும் இந்தியா வந்தடையும் என்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் தெரிவித்துள்ளது.
இவற்றில் 33 லட்சம் பிசிஆர் கிட்டுகளும் 37 லட்சம் ரேபிட் ஆன்டிபாடீஸ் கிட்டுகளும் உள்ளன. கொரோனா ஹாட்ஸ்பாட்டுகளில் பிசிஆர் கிட்டுகளோடு சேர்ந்து பயன்படுத்த வேண்டிய ரேபிட் ஆன்டிபாடீஸ் கிட்டுகள் சென்ற வாரமே வந்திருக்க வேண்டும் எனவும் வேறு சில காரணங்களால் தாமதம் ஏற்பட்டு விட்டதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் கூறியுள்ளது.
தற்போது 6 வாரங்களுக்கு தேவையான பிசிஆர் கிட்டுகள் இருப்பில் உள்ளதாகவும் அது தெரிவித்துள்ளது.
Comments