பணிக்கு வராத அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்த உத்தரவைத் திரும்பப் பெற அமைச்சர் அறிவுறுத்தல்

0 1420
மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான்

கொரோனா அச்சத்தின் காரணமாக அலுவலகத்துக்கு வர விருப்பம் இல்லையென்றால், பணியில் இருந்து விடுவிக்கப்போவதாக நுகர்வோர் பாதுகாப்புத் துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.

ஊரடங்கு கடைப்பிடிப்பால் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அமைச்சகத்தில் பெரும்பாலோர் வீட்டிலிருந்தே பணியாற்றி வருகின்றனர். குறைந்த எண்ணிக்கையிலான அதிகாரிகளே பணிக்கு வந்ததால், அலுவலகத்துக்கு வர முடியாத காரணத்தை விளக்கும்படி மற்ற அதிகாரிகளுக்கு அறிவிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

கொரோனா அச்சத்தின் காரணமாக வர முடியாவிட்டால் பணியில் இருந்து விடுவிக்கப்போவதாகவும் அதில் எச்சரித்துள்ளது. இந்த விவகாரம் அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானுக்குத் தெரியவந்ததை அடுத்து இந்த உத்தரவைத் திரும்பப் பெறுமாறு அமைச்சகத்துக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments